Powered by Blogger.
RSS

என் friend-அ போல ...

திரைப்படம் : நண்பன் 
வரிகள் : பாடலாசிரியர் விவேகா 
இசை : ஹரிஷ் ஜெயராஜ் 
குரல் : கிரிஷ், சுட்ஷித் சுரேசன் 


ஒலிவடிவம்


என் friend-அ போல யாரு மச்சான்..
அவன் trend-அ எல்லாம் மாத்தி வச்சான்
நீ எங்க போன எங்க மச்சான்
என எண்ணி எண்ணி ஏங்க வச்சான்
நட்பால நம்ம நெஞ்ச தச்சான்
நம் கண்ணில் நீர பொங்க வச்சான்

தோழனின் தோழ்களும் அன்னை மடி
அவன் தூரத்தில் பூத்திட்ட தொப்புள் கொடி
காதலை தாண்டியும் உள்ள படி
என்றும் நட்புதான் உயர்ந்தது பத்து படி

உன் நட்பை நாங்கள் பெற்றோம்
அதனாலே யாவும் பெற்றோம்
மெலே மெலே சென்ட்ரொம்
வான் மேகம் போலெ நின்றோம்

புது பாதை நீயே போட்டு தந்தாய்...
யென் பாதி வழியில் விட்டு சென்ட்றாய்...
ஒரு தாயை தேடும் பிள்ளை ஆனோம்
நீ இல்லை என்றால் எங்கே போவோம்..

காணொளி வடிவம்

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

மனதில் உறுதி ...

திரைப்படம் : கள்வனின் காதலி (1955)
வரிகள் : மகாகவி பாரதியார் 
இசை : கோவிந்தராஜலு நாயுடு 
குரல் : T.M.சௌந்தராஜன், P.பானுமதி 

ஒலிவடிவம்




ஆண்: மனதில் உறுதி வேண்டும் 
வாக்கினிலே இனிமை வேண்டும்
(மனதில்)

பெண்: மனதில் உறுதி வேண்டும் 
வாக்கினிலே இனிமை வேண்டும்
நினைவு நல்லது வேண்டும் 
நெருங்கின பொருள் கைப்பட வேண்டும் 
(மனதில்)



கனவு மெய்ப்பட வேண்டும்
கை வசமாவது விரைவில் வேண்டும் 
நினைவு நல்லது வேண்டும்
நெருங்கின பொருள் கைப்பட வேண்டும் 
(மனதில்) 


ஆண் : தனமும் இன்பமும் வேண்டும்
தரணியிலே பெருமை வேண்டும் 

பெண் : பெண்விடுதலை வேண்டும்
பெரிய கடவுள் காக்க வேண்டும் 
கண் திறந்திட வேண்டும் 
காரியத்தில் உறுதி வேண்டும் 

மண்பயனுற வேண்டும் 
வானகம் இங்கு தென்பட வேண்டும் 
(மனதில்) 


இருவரும் : மனதில் உறுதி வேண்டும் 
வாக்கினிலே இனிமை வேண்டும்
நினைவு நல்லது வேண்டும் 
நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்




காணொளி வடிவம்

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

துன்பம் நேர்கையில் ...

திரைப்படம் : ஓர் இரவு 
வரிகள் : பாவேந்தர் பாரதிதாசன் 
இசை : M.M.தண்டபாணி தேசிகர் 
குரல் : M.S.ராஜேஸ்வரி, வர்மா 


ஒலிவடிவம் 




துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ
இன்பம் சேர்க்க மாட்டாயா? - எமக்கு
இன்பம் சேர்க்க மாட்டாயா? - நல்
அன்பிலா நெஞ்சில் தமிழில் பாடிநீ
அல்லல் நீக்க மாட்டாயா? - கண்ணே
அல்லல் நீக்க மாட்டாயா? 

(துன்பம்)
 
வன்பும் எளிமையும் சூழும் நாட்டிலே
வாழ்வில் உணர்வு சேர்க்க - எம்
வாழ்வில் உணர்வு சேர்க்க - நீ
அன்றை நற்றமிழ்க் கூத்தின் முறையினால்
ஆடிக்காட்ட மாட்டாயா? - கண்ணே
ஆடிக்காட்ட மாட்டாயா? 
(துன்பம்)
அறமி தென்றும் யாம் மறமி தென்றுமே
அருகி லாத போது - யாம்
அருகி லாத போது - தமிழ்
இறைவ னாரின் திருக்குறளிலே ஒருசொல்
இயம்பிக் காட்ட மாட்டாயா? - நீ
இயம்பிக் காட்ட மாட்டாயா? 
(துன்பம்)
 
புறமி தென்றும்நல் லகமி தென்றுமே
புலவர் கண்ட நூலின் - தமிழ்ப்
புலவர் கண்ட நூலின் - நல்
திறமை காட்டிஉனை ஈன்றஎம் உயிர்ச்
செல்வம் ஆக மாட்டாயா? - தமிழ்ச்
செல்வம் ஆக மாட்டாயா? 
(துன்பம்)


காணொளி வடிவம் 

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

ஆறுபடை வீடு கொண்ட திருமுருகா ...

திரைப்படம் : கந்தன் கருணை (1967)
வரிகள் : கவியரசு கண்ணதாசன்
இசை : K.V.மகாதேவன் 
குரல் : சீர்காழி கோவிந்தராஜன்




ஒலி வடிவம் (MP3)




ஆறுபடை வீடு கொண்ட திருமுருகா
திருமுருகாற்றுப்படை தனிலே வருமுருகா முருகா
(ஆறுபடை)


பாட்டுடைத் தலைவன் என்று உன்னை வைத்தேன்
உன்னைப் பாடித் தொழுவதற்கே என்னை வைத்தேன் முருகா
( ஆறுபடை)


வேண்டிய மாம்பழத்தைக் கணபதிக்கு - அந்த
வெள்ளிப்பனித் தலையர் கொடுத்ததற்கு
ஆண்டியின் கோலமுற்று மலை மீது - நீ
அமர்ந்த பழனி ஒரு படைவீடு
( ஆறுபடை)


ஒரு பெரும் தத்துவத்தின் சாறெடுத்து - நல்ல
ஓம் எனும் மந்திரத்தின் பொருள் உரைத்து
தந்தைக்கு உபதேசம் செய்த மலை - எங்கள்
தமிழ்த்திருநாடு கண்ட சுவாமிமலை
( ஆறுபடை)


தேவர் படைத்தலைமை பொறுப்பெடுத்து
தோள்கள் தினவெடுத்துச் சூரன் உடல் கிழித்து
கோவில் கொண்டே அமர்ந்த ஒருவீடு - கடல்
கொஞ்சும் செந்தூரில் உள்ள படைவீடு
(ஆறுபடை)


குறுநகை தெய்வானை மலரோடு - உந்தன்
குலமகளாக வரும் நினைவோடு
திருமணக்கோலம் கொண்ட ஒரு வீடு - வண்ண
திருப்பரங்குன்றம் என்னும் படைவீடு
(ஆறுபடை)


தேவர் குறை தவிர்த்து சினம் தணிந்து - வள்ளி
தெள்ளுத் தமிழ் குறத்தி தனை மணந்து
காவல் புரிய என்று அமர்ந்த மலை - எங்கள்
கன்னித் தமிழர் திருத் தணிகை மலை
(ஆறுபடை)


கள்ளமில்லாமல் வரும் அடியவர்க்கு - நல்ல
காட்சி தந்து கந்தன் கருணை தந்து
வள்ளி தெய்வானையுடன் அமர் சோலை
தங்க மயில் விளையாடும் பழமுதிர்சோலை
(ஆறுபடை)


                                      காணொளி வடிவம் 

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS