Powered by Blogger.
RSS

மனதில் உறுதி ...

திரைப்படம் : கள்வனின் காதலி (1955)
வரிகள் : மகாகவி பாரதியார் 
இசை : கோவிந்தராஜலு நாயுடு 
குரல் : T.M.சௌந்தராஜன், P.பானுமதி 

ஒலிவடிவம்




ஆண்: மனதில் உறுதி வேண்டும் 
வாக்கினிலே இனிமை வேண்டும்
(மனதில்)

பெண்: மனதில் உறுதி வேண்டும் 
வாக்கினிலே இனிமை வேண்டும்
நினைவு நல்லது வேண்டும் 
நெருங்கின பொருள் கைப்பட வேண்டும் 
(மனதில்)



கனவு மெய்ப்பட வேண்டும்
கை வசமாவது விரைவில் வேண்டும் 
நினைவு நல்லது வேண்டும்
நெருங்கின பொருள் கைப்பட வேண்டும் 
(மனதில்) 


ஆண் : தனமும் இன்பமும் வேண்டும்
தரணியிலே பெருமை வேண்டும் 

பெண் : பெண்விடுதலை வேண்டும்
பெரிய கடவுள் காக்க வேண்டும் 
கண் திறந்திட வேண்டும் 
காரியத்தில் உறுதி வேண்டும் 

மண்பயனுற வேண்டும் 
வானகம் இங்கு தென்பட வேண்டும் 
(மனதில்) 


இருவரும் : மனதில் உறுதி வேண்டும் 
வாக்கினிலே இனிமை வேண்டும்
நினைவு நல்லது வேண்டும் 
நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்




காணொளி வடிவம்

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment